இதனை நிறைவேற்றுவதே எங்களின் இலக்கு - பாட் கம்மின்ஸ்!

Updated: Sat, Nov 18 2023 18:03 IST
Image Source: Google

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 10 ஆண்டுகளாகத் தொடரும் ஐசிசி கோப்பைக்கானத் தேடலை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு இந்திய அணியும், 6ஆவது முறையாக உலகக் கோப்பையை வசமாக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.

இந்த நிலையில்,  இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரசிகர் கூட்டத்தை அமைதியாக்குவதே எங்களது இலக்கு என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அஹ்மதாபாத் மைதானத்திற்கு நாளை வரவுள்ள ரசிகர்கள் நிச்சயம் இந்திய அணிக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என்று தெரியும். ஆனால் விளையாட்டை பொறுத்த வரைக்கும் 1.3 லட்சம் ரசிகர்களையும் மொத்தமாக அமைதியாக்குவதை விடவும் வேறு எதுவும் மன நிறைவை கொடுக்காது. இதனை நிறைவேற்றுவதே எங்களின் இலக்கு.

தொடர்ந்து, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை விளையாடி வருகிறது. நிச்சயம் அவர்களுக்கு எதிராக நாங்கள் களமிறங்குவது சிறந்த போட்டியாக இருக்கும். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோரின் தொடக்க ஸ்பெல் எங்களுக்கு மிகமுக்கியமானதாக இருக்கும். அரையிறுதி போல் மீண்டும் ஒருமுறை அவர்களால் என்ன தாக்கத்தை கொடுத்தால், என்ன நடக்கும் என்பது தெரியும். அவர்கள் இருவரும் முக்கியமான போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்.

அதேபோல் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு பெரிதாக நிறைவான வெற்றியை பெறவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் கடினமான சூழலில் சிக்கிக் கொண்டு, கடைசி கட்டத்தில் வெற்றிபெறுவதற்கான வழியை கண்டறிந்து வென்றுள்ளோம். ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு வீரர் முன் நின்று வழிநடத்தி இருக்கிறார். அதனால் இறுதிப்போட்டியிலும் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை