NZ vs BAN: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி ஒருநாள் தொடரில்
பங்கேற்றது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில்
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தேவன் கன்வே, டேரி மிச்ட்செல் அதிரடியாக
விளையாடி சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில்
நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 316 ரன்களை எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் தேவன் கன்வே 126, டேரி மிட்ச்செல் 100 ரன்களையும் சேர்த்தனர்.
வங்கதேச அணி தரப்பில் ரூபேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய வங்கதேச அணி, நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை
சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் தரும்பினர்.
இருப்பினும் இறுதிவரை போராடிய முகமதுல்லா அரைசதம் கடந்தார். இருப்பினும் வங்கதேச
அணி 42.4 ஒவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து அணி தரப்பில் ஜிம்மி நிஷம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி
ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியில் சதமடித்த
தேவன் கன்வே அட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.