NZ vs BAN, 1st Test: வரலாற்று வெற்றியை ருசித்தது வங்கதேசம்!

Updated: Wed, Jan 05 2022 10:13 IST
Image Source: Google

நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் மவுன்ட் மங்குனிவில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 328 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 458 ரன்கள் குவித்து. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், நீல் வாக்னெர் 3 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து அடுத்து 130 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 169 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக வில் யங் 69 ரன்களும், ராஸ் டெய்லர் 40 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.  வங்கதேச அணி தரப்பில் எபடோட் ஹொசைன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.

இதன்மூலம் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று வெற்றியை ருசித்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை