NZW vs INDW : லாரன், கெர் அதிரடி; தொடரை வென்றது நியூசிலாந்து!

Updated: Fri, Feb 18 2022 11:40 IST
NZ v IND: New Zealand 'Down' India By 3 Wickets In 3rd ODI
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு மேஹனா - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

பின்னர் 51 ரன்களில் ஷஃபாலி ஆட்டமிழக்க, 61 ரன்களில் மேஹனாவும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தீப்தி சர்மா 69 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.

இதனால் 49.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதன்பின் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் சோபியா டிவைன், சூஸி பேட்ஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சதர்வைட் - அமிலியா கெர் இணை அதிரடியாக விளையாடிய ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் இருவரும் அரைசதமும் கடந்தனர். அதன்பின் சதர்வைட் 59 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறக்கிய லாரன் டௌன் அதிரடியாக விளையாடி அணி வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் 49.1 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி இலக்கை எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை