NZ vs ENG, 2nd Test: 303 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; போல்ட் அசத்தல்!

Updated: Sat, Jun 12 2021 09:39 IST
NZ vs ENG, 2nd Test: New Zealand have bowled England out for 303 (Image Source: Google)

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். 

அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் - டொமினிக் சிப்லி இணை களமிறங்கி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் சிபிலி 35 ரன்களில் ஆட்டமிழங்க, அடுத்து வந்த ஜாக் கிரௌலி, கேப்டன் ரூட், ஒல்லி போப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்திய ரோரி பர்ன்ஸ் அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்த டேனியல் லாரன்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தார். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்திய ரோரி பர்ன்ஸ் அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்த டேனியல் லாரன்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தார். 

இதையடுத்து டேனியல் லாரன்ஸ் 67 ரன்களுடனும், மார்க் வுட் 16 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். போட்டி தொடங்கிய 10 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 303 ரன்களில் சுருண்டது. 

இங்கிலாந்து அணி தரப்பில் டேனியல் லாரன்ஸ் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை