NZ vs ENG,1st test: அதிரடியில் அசத்திய கான்வே; மிரண்டு போனா இங்கிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களைக் குவிந்திருந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டேவன் கான்வே 136 ரன்களுடனும், ஹென்றி நிக்கோல்ஸ் 46 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இருவரும் சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் 61 ரன்கள் எடுத்திருந்த ஹென்ரி நிக்கோலஸ் மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவன் கான்வே 150 ரன்களை கடந்து அசத்தினார்.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்ரகள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியாக கடைசி விக்கெட்டிற்கு களமிறங்கிய நெய்ல் வாக்னர் - டேவன் கான்வேவுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அளித்தார். இதன் மூலம் அறிமுக வீரர் டேவன் கான்வே சிக்சர் அடித்து தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் நியூசிலாந்து அணி தரப்பில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதன் மூலம் நீயூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டேவன் கான்வே 200 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில் அறிமுக வீரர் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.