NZ vs SA, 2nd Test: சரேல் எர்வீ சதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!

Updated: Fri, Feb 25 2022 12:21 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ஜில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் டீன் எல்கர் - சரேல் எர்வீ  இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் டீன் எல்கர் 41 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஐடன் மார்க்ரம் 42 ரன்னில் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சரேல் எர்வீ  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். 

அதன்பின் 108 ரன்களில் எர்வீயும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ரஸ்ஸி வெண்டர் டுசென் - டெம்பா பவுமா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்களைச் சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி, மேட் ஹென்றி, நெய்ல் வாக்னர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை