NZ vs SL, 2nd Test: இலங்கையின் தோல்வியை உறுதிசெய்தது நியூசிலாந்து!

Updated: Sun, Mar 19 2023 13:19 IST
NZ vs SL, 2nd Test: New Zealand have put up a terrific performance with the ball! (Image Source: Google)

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி இரண்டு போட்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்த்தில் கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் இரட்டை சதமடிமடித்ததன் மூலம்,  நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 580 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, டக் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 554 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை திமுத் கருணரத்னே - பிரபாத் ஜெயசூர்யா தொடங்கினர். இதில் ஜெயசூர்யா 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேத்யூஸ் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கருணர்த்னே - சண்டிமல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதில் கருணரத்னே அரைசதம் கடந்தார். அதன்பின் சண்டிமல் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தனஞ்செயா, மதுசங்கா, ரஜிதா ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கருணரத்னே 89 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனால் இலங்கை அணி 164 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனாது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, மைக்கேல் பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் ஒஷாதா ஃபெர்னாண்டோ மீண்டும் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கருணரத்னே குசால் மெண்டீஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 51 ரன்களில் கருணரத்னே ஆட்டமிழந்தார். இதனால் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இதில் குசால் மெண்டீஸ் 50 ரன்களுடனும், மேத்யூஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ, டக் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து 303 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை