தி ஹண்ரட் : தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த மான்செஸ்டர்!
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புது முயற்சியாக ‘தி ஹண்ரட்’ தொடர் நேற்று தொடங்கியது. ஒரு இன்னிங்ஸிற்கு 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் இத்தொடர் கடந்த ஆண்டே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று லண்டனில் தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் கேட் கிராஸ் தலைமையிலான மான்செஸ்டர் ஒசிஜினால்ஸ் மகளிர் அணி, ஓவல் இன்விசிபிள் மகளிர் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மான்செஸ்டர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக லிசெல் லீ 42 ரன்களையும், ஹர்மப்ரீத் கவுர் 29 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஓவல் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய டேனே வான் நிக்கேர்க் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் ஓவல் இன்விசிபிள் மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 ரன்களைச் சேர்த்த நிக்கேர்க் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.