தி ஹண்ட்ரட் 2023: டாம் கரண் அதிரடியில் சாம்பியன் பட்டத்தை வென்றது ஓவல் இன்விசிபில்!

Updated: Mon, Aug 28 2023 13:41 IST
Image Source: Google

இங்கிலாந்து நாடு தற்போது தி ஹண்ட்ரட் என்ற புது வகையான கிரிக்கெட் வடிவத்தை கடந்த வருடத்திலிருந்து அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான தி 100 போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது . இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி மற்றும் சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் இன்வின்சிபில்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன . லண்டன் நகரில் அமைந்துள்ள பிரபலமான லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய ஓவல் இன்விசிபில் அனையினருக்கு துவக்கமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது . ஒரு கட்டத்தில் அந்த அணியினர் 36 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தனர். அப்போது ஜோடி சேர்ந்த ஓவல் இன்விசிபில் அணியின் ஆல்ரவுண்டர்களான டாம் கரண் மற்றும் ஜிம்மி நீஷம் இருவரும் அதிரடியாக விளையாடி தங்களது அணியை சரிவிலிருந்து மீட்டனர் . மேலும் வலுவான ஒரு வெற்று இலக்கை நிர்ணயிப்பதற்கும் இவர்களது ஆட்டம் கை கொடுத்தது.

இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய டாம் கரன் இந்த போட்டியிலும் 34 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் விளக்காமல் இருந்தார். இவருக்கு இணையாக விளையாடிய ஜிம்மி நீஷம் 33 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 57 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் . இவர்கள் இருவரது அதிரடி ஆட்டத்தால் ஓவல் இன்விசிபில் அணியினர் 100 பந்துகளில் 161 ரன்களைச் சேர்த்தது.

இதனைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மான்செஸ்டர் ஒரிஜினல் அணியின் தொடக்க வீரர்கள் பிலிப் சால்ட் 26 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மேக்ஸ் ஹோல்டன் அதிரடியாக விளையாட, அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வெய்ன் மேட்சென், லௌரி எவன்ஸ், பால் வால்டர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் அதிரடியாக விளையாடிவந்த மேக்ஸ் ஹோல்டன் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த ஜேமி ஓவர்டன் 28, டாம் ஹார்ட்லி 16 ரன்களையும் சேர்த்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகள் முடிவில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே எடுத்தது. ஓவல் இன்விசிபில் தரப்பில் வில் ஜேக்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் ஓவல் இன்விசிபில் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக டாம் கரணும், தொடர் நாயகனாக ஜேமி ஓவர்டனும் தேர்வு செய்யப்பட்டனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை