உலகக்கோப்பை 2023: ஏழு ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்தடைந்த பாகிஸ்தான் அணி!

Updated: Thu, Sep 28 2023 11:05 IST
உலகக்கோப்பை 2023: ஏழு ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்தடைந்த பாகிஸ்தான் அணி! (Image Source: Google)

ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இதில் நாளை உலகக் கோப்பை தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுகிறது. இந்தப் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது. தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி அன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2ஆவது பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. அக்டோபர் 6ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் விளையாடுகிறது. 

இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி இந்தியா வருவதில் விசா சிக்கல் இருந்தது . 

இந்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்தடைந்தனர். பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வருகையை ஒட்டி ஹைதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அங்கு காவலுக்கு நிற்க வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் பாகிஸ்தான் வீரர்களுடன் உற்சாகமாக பேசி கைகுலுக்கினர். 

இதனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். கடைசியாக 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்காக பாகிஸ்தான அணி இந்தியா வந்தது. அந்த தொடரில் பாபர் அசாம் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் தற்போது முதல் முறையாக பாபர் அசாம் இந்தியாவில் விளையாடுகிறார். புறப்படுவதற்கு முன்பு பேசிய பாபர் அசாம் அரை இறுதி சொல்வதெல்லாம் சிறிய குறிக்கோள் தான் என்றும் உலகக்கோப்பை கைப்பற்றுவதை எங்களது லட்சியம் என்று கூறினார்.

பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (கே), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹின் ஷா அஃப்ரிடி, முகமது வாசிம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை