PAK vs AUS, 1st Test (Day 3 Lunch): வார்னர், கவாஜா அபாரம்; பாகிஸ்தான் தடுமாற்றம்!

Updated: Sun, Mar 06 2022 12:48 IST
Image Source: Google

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 476 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக இமாம் உல் ஹக் 157 ரன்களையும், அசார் அலி 185 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா - டேவிட் வார்னர் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகின்றன. 

இதில் இருவரும் அரைசதம் கடக்க ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலி அணி விக்கெட் இழப்பின்றி 138 ரன்களைச் சேர்த்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாஜா 70 ரன்களையும், டேவிட் வார்னர் 60 ரன்களையும் சேர்த்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை