PAK vs AUS,2nd Test(Day 1): அசத்திய கவாஜா; சதத்தை தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 36 ரன்களில் டேவிட் வார்னர் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த மார்னஸ் லபுசாக்னே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா - ஸ்டீவ் ஸ்மித் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபாரமாக விளையாடிய உஸ்மான் கவாஜா தனது சொந்த நாட்டில் முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய ஸ்மித்தும் அரைசதம் கடந்தார்.
பின்னர் 72 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் ஆட்டமிழந்து வெளியேற அடுத்ததாக நாதன் லையன் களத்திற்கு வந்தார். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாஜா 127 ரன்களுடன் களத்தில் உள்ளார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி, அஸர் அலி தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.