ENG vs PAK, 5th T20I: தீவிர காய்ச்சல் காரணமாக் நஷீம் ஷா தொடரிலிருந்து விலகல்!

Updated: Wed, Sep 28 2022 16:55 IST
PAK vs ENG 5th T20I: Pacer Naseem Shah Ruled Out Due To Viral Infection (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு தயாராவதற்கான கடைசி கட்ட போட்டிகளில் அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

ஒருபுறம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரை கைப்பற்றிய சூழலில் அடுத்ததாக தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்கிறது. மற்றொரு புறம் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் 7 டி20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் தான் பெரும் பின்னடைவை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக பார்க்கப்படும் நஷீம் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து தொடரின் போது நசீம் ஷாவுக்கு தொடர்ச்சியாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது காய்ச்சல் இருப்பதாகவும், ஆனால் அது சாதாரணமான ஒன்று அல்ல எனவும் கண்டறிந்தனர்.

இதனையடுத்து நசீம் ஷா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டைப்பாய்ட், டெங்கு உள்ளிட்ட பலவிதமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதன் முடிவை வைத்து தான் அவர் குணமடைய எத்தனை நாட்கள் ஆகும் என்பது தெரியவரும்.

நசீம் ஷா தீவிர காய்ச்சலால் ஒருவேளை பாதிக்கப்பட்டால், பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து தொடர் மட்டுமின்றி டி20 உலகக்கோப்பையிலும் பெரும் பின்னடைவாகும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வீரர் முழு உடற்தகுதியுடன் வருவாரா என்பது சந்தேகம் தான். 

எனவே இவர் இல்லாமல் பாகிஸ்தான் சமாளித்து ஆக வேண்டும். ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக நசீம் ஷா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை