PAK vs NZ, 4th T20I: சாப்மேன், பௌஸ் அரைசதம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!

Updated: Thu, Apr 20 2023 23:05 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற, மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 1-2 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று ராவல்பிண்டியிலுள்ள ராவல்பிண்டி  கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சாட் பௌஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் மறுமுனையில் கேப்டன் டாம் லேதம் 13 ரன்களிலும், வில் யங் 6 ரன்களிலும், டெரில் மிட்செல் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் பௌஸுடன் இணைந்த மார்க் சாப்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பௌஸ் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு, 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் பவுண்டரிகளாக விளாசித் தள்ளிய மார்க் சாப்மேன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 5ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 1000 ரன்களையும் கடந்து அசத்தினார். 

இதற்கிடையில் 8 ரன்களை எடுத்திருந்த ரச்சின் ரவீந்திர ஆட்டமிழந்து வெளியேற, மழையும் குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 18.5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்திருந்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த மார்க் சாப்மேன் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என் 71 ரன்களைக் குவித்து களத்தில் உள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை