PAK vs WI, 1st ODI: பாபர் ஆசாம் சதத்தில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் - ஷமாரா ப்ரூக்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின்னர் ஷமாரா ப்ரூக்ஸ் 70 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற மறுமுனையிலிருந்த ஷாய் ஹோப் சதம் விளாசி அசத்தினார்.
பின்னர் 127 ரன்களில் ஷாய் ஹோப்பும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன், பிராண்டன் கிங், ரோவ்மன் பாவல், ரொமாரியா செஃபெர்ட் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் 77 ரன்களைச் கொடுத்த நிலையிலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் பகர் ஸமான் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக் - கேப்டன் பாபர் ஆசாம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் இமாம் உல் ஹக் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் பாபர் ஆசாமுடன் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வானும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளீப்படுத்தி வந்த பாபர் ஆசாம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 27ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருக்கு துணையாக விளையாடிய முகமது ரிஸ்வானும் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் பாபர் ஆசாம் 103 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய குஷ்டில் ஷா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் 49.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.