ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

Updated: Wed, Aug 30 2023 12:58 IST
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு! (Image Source: Google)

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 16ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், பாகிஸ்தானின் முல்தான் நகரில் இன்று தொடங்குகிறது. இத்தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் மோதுகின்றன. பாகிஸ்தான் நடத்தும் இத்தொடரின், இறுதி ஆட்டம் உள்பட மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், அதில் 4 ஆட்டங்கள் மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியா விளையாடுவது உள்பட, இதர போட்டிகள் இலங்கையில் நடத்தப்படுகின்றன. இறுதி ஆட்டம் கொழும்பில் செப்டம்பா் 17-ஆம் தேதி நடைபெறும்.

இரு முறை சாம்பியனான பாகிஸ்தான், நடப்பாண்டில் அனைத்து ஃபாா்மட்டிலும் சிறந்த அணியாக தன்னை நிலைநிறுத்துகிறது. சரியான வீரா்களுடன் சவால் அளிக்கும் அணியாகத் தெரிகிறது. போட்டியை நடத்தும் நாடாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது பாகிஸ்தான். சமீபத்தில் ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் நம்பா் 1 இடத்துக்கு அந்த அணி முன்னேறியிருப்பதும் அதற்கு உதாரணம். ஒரு நாள் தொடரில் நியூஸிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான், மீண்டும் அதே அணியை வீழ்த்தி பலம் காட்டியது.

இத்தொடரில் நேபாளம் களம் காண்பது இதுவே முதல் முறையாகும். ஐசிசியின் உலகக் கோப்பை லீக் 2 கிரிக்கெட்டில் கடைசி 12 ஆட்டங்களில் அந்த அணி 11-இல் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நடப்பாண்டு தொடக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று போட்டிக்கு தன்னை தகுதிப்படுத்திக் கொண்டது. பிரதான அணிகளுக்கு சவால் அளிக்காவிட்டாலும், ஒரு சா்வதேச போட்டிக்கான அனுபவத்தை இந்தப் போட்டியிலிருந்து பெற்றுக்கொள்ள வருகிறது ரோஹித் படெல் தலைமையிலான நேபாளம்.

இந்நிலையில் இன்று நேபாளம் அணியை எதிர்கொள்ளவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்களான ஃபகர் ஸமான், இஃப்திகார் அஹ்மது, முகமது ரிஸ்வான், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (கே), ஃபகர் ஸமான், இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, நசிம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை