வக்கார் யுனிஸின் சாதனையை சமன் செய்த ஹாரிஸ் ராவுஃப்!
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுகள் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை அடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களாக முகமது நயிம், மெஹிதி ஹசன் களமிறங்கினர். ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும், நயிம் 20 ரன்னிலும் அவுட் ஆகினர். பின்னர் வந்த வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
ஆனால், சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் சகீப் அல் ஹசன் 53 ரன்களையும், முஷ்பிகூர் ரஹிம் 64 ரன்களையும் சேர்ந்ததனர். ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் வங்கதேசம் 38.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவுல்ப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூஃப் வங்காளதேச பேட்ஸ்மேன் தவ்ஹித் ஹரிடோயின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இது அவரது 50 விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்காக அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய 3ஆவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை முன்னாள் வீரர் வாக்கர் யூனிசுடன் பகிர்ந்துள்ளார். இருவரும் தங்களது 27 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த பட்டியலில் 24 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹசன் அலி முதலிடத்திலும், 25 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷாஹின் அஃப்ரிடி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.