ஐக்கிய அரபு அமீரகத்தில் பிஎஸ்எல் போட்டிகள் - பிசிபி ஆலோசனை!

Updated: Sat, May 08 2021 12:20 IST
Pakistan Super League's Remaining Matches May Be Held In UAE (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் அணி வீரர்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து வந்தது. ஆனால் அந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த தொடர் மீண்டும் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 20ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக மே 22ஆம் தேதி முதல் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வருவார்கள் என கூறப்பட்டது. 

இது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், மீதமுள்ள பிஎஸ்எல் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த தேசிய செயல்பாட்டு மையத்தில் இருந்து அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஒருவேளை அனுமதி கிடைத்துவிட்டால், மீதமுள்ள போட்டிகள் அனைத்தையும் கராச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஒரு வேளை தேசிய செயல்பாட்டு மையம் அனுமதி தரவில்லை என்றால் மீதமுள்ள தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும். அதற்கான பேச்சுவார்த்தைகளும் முழுவீச்சில் நடந்து வருவதாக தெரிவித்தார். 

ஐபிஎல் தொடரின் போது பயோ பபுள் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டது. அதே போன்று பிஎஸ்எல் தொடரிலும் இந்த முறை சர்வதேச தரம் வாய்ந்த பாதுகாப்பு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அந்நிறுவனம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் அணிகள் பின்பற்றுவதை கண்காணிக்கும் என அறிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை