Pakistan vs Australia, 1st Test – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இங்கு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளது.
இந்தத் தொடர் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ஏனெனில் 1998-ம் ஆண்டுக்கு பாகிஸ்தானில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடுவது இதுவே முதல்முறை என்பதால் அதிக கவனம் ஈர்த்துள்ளது.
இதில் இரு அணிகள் இடையே முதல் டெஸ்ட் ராவில்பிண்டியில் நாளை மறுநாள் தொடங்கவிருக்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா
- இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம்
- நேரம் - காலை 10.30 மணி
போட்டி முன்னோட்டம்
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆணி 24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் முதல்முறையாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் போன்ற நட்சத்திர பேட்டர்களையும், கம்மின்ஸ், ஹசில்வுட், ஸ்டார்க் போன்ற பந்துவீச்சாளர்களையும் கொண்டுள்ளதால் நிச்சயம் பாகிஸ்தானுக்கு சவாலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியிலும் இமான் உல் ஹக், அசார் அலி, ஃபவாத் ஆலாம், ரிஸ்வான் போன்ற அதிரடி வீரர்களைக் பேட்டிங்கில் கொண்டுள்ளது.
பந்துவீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, நௌமன் அலி ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 66
- ஆஸ்திரேலியா வெற்றி - 33
- பாகிஸ்தான் வெற்றி - 15
- முடிவில்லை - 18
உத்தேச அணி
பாகிஸ்தான் - இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக், அசார் அலி, பாபர் அசாம் (கே), ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான், ஃபஹீம் அஷ்ரப், நசீம் ஷா, சஜித் கான், நௌமன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி
ஆஸ்திரேலியா - உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன்/ ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லையான்
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
- பேட்டர்ஸ் - அசார் அலி, பாபர் அசாம், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித்
- ஆல்-ரவுண்டர்கள் - நௌமன் அலி, இப்திகார்-அஹமது
- பந்துவீச்சாளர்கள் - ஷஹீன் அஃப்ரிடி, நாதன் லயன், பாட் கம்மின்ஸ்.