பாகிஸ்தான் vs வங்கதேசம், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Nov 05 2022 22:46 IST
Pakistan vs Bangladesh, T20 World Cup, Super 12 - Cricket Match Prediction, Where To Watch, Probable (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஒன்றில் இடம்பிடித்திருந்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

அதேசமயம் குரூப் 2 இல் இடம்பிடித்துள்ள அணிகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. அதற்கேற்றது போல் நாளை நடைபெறும் போட்டிகளின் முடிவைக் கொண்டு எந்த இரண்டு அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது தெரிந்துவிடும்.

அதன்படி அடிலெய்டில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கும் நடைபெறும் வாழ்வா சாவா போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளின் போட்டி முடிவுகளுக்கு ஏற்றவகையில் அரையிறுதிச்சுற்றுக்கான ஒரு வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி என 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இதில் நாளை தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்திடம் தோல்வியடையும் பட்சத்தில், இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சில் சரிவுகளை சந்திதுள்ளது. கேப்டன் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ரன்களை சேர்க்க தடுமாறி வருகின்றன. அதேசமயம் சதாப் கான், முகமத் ஹாரிஸ், இஃப்திகார் அஹ்மத் பேட்டிங்கில் சோபித்துள்ளது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அவருடன் மற்ற பேட்டர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இப்போட்டியில் நிச்சயம் வங்கதேச அணிக்கும் வெற்றி வாய்ப்பு உண்டு. பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத், முஷ்தபிசூர் ஆகியோர் எதிரணி பேட்டர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவர் என்பதில் சந்தேகமில்லை.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs வங்கதேசம்
  • இடம் - அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்
  • நேரம் - காலை 9.30 மணி

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 17
  • பாகிஸ்தான் - 15
  • வங்கதேசம் - 02

உத்தேச அணி

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் (கே), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா.

வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் (கே), அஃபிஃப் ஹொசைன், யாசிர் அலி, மொசாடெக் ஹொசைன், நூருல் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: நுருல் ஹசன், முகமது ரிஸ்வான்
  • பேட்டிங்: லிட்டன் தாஸ், இஃப்திகார் அகமது, முகமது ஹாரிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஷகிப் அல் ஹசன், ஷதாப் கான், முகமது நவாஸ்
  • பந்துவீச்சு: தஸ்கின் அகமது, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை