டி20 உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா பாகிஸ்தான்?

Updated: Sun, Oct 30 2022 09:47 IST
Pakistan vs Netherlands, T20 World Cup, Super 12 - Probable 11 And Fantasy 11 Tips (Image Source: Google)

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதலாவது ஆட்டத்தில் இந்தியாவிடமும், 2ஆவது ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயிடமும் பணிந்தது. இதேபோல் நெதர்லாந்து அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களில் வங்கதேசம், இந்தியாவிடம் அடுத்தடுத்து தோல்வி கண்டு தனது பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு இது வாழ்வா? சாவா? போராட்டமாகும். இந்த ஆட்டத்தில் தோற்றால் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போய்விடும். இனிவரும் ஆட்டங்கள் அனைத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதுடன், மற்ற ஆட்டங்களின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும்.

அதிலும் அணியின் தொடக்கவீரர்கள் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆசாம் ஆகியோர் அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பியுள்ளது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதற்கடுத்து அந்த அணியின் ஃபீல்டிங் பெரும் பிரச்சினையாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் அந்த அணி அடுத்தடுத்து கேட்சுகளை தவறவிடுவதும், பீல்டிங்கை தவறவிடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. அதனை சரிசெய்யும் பட்சத்தில் அந்த அணி நிச்சயம் அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் மறுமுனையில் உள்ள நெதர்லாந்து அணி குருப் ஸ்டேஜ் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் மேக்ஸ் ஓடவுட், பாஸ் டி லீட், டாம் கூப்பர், விக்ரம்ஜித் சிங் ஆகியோரும் பந்துவீச்சில் டிம் பிரிங்கில், பான் வான் மீகெரென் ஆகியோரையும் சார்ந்துள்ளது.

இவ்விரு அணிகளும் ஒரே ஒரு முறை 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது. இந்த தொடரில் சரிவை சந்தித்ததால் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கும் பாகிஸ்தான் பலமாக மீண்டு அசத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உத்தேச லெவன்

பாகிஸ்தான்: பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், ஷான் மசூத், ஹைதர் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், இப்திகார் அகமது, ஆசிப் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், நசீம் ஷா.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், ஷாரிஸ் அஹ்மத், பிரெட் கிளாசென், பால் வான் மீகெரென்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: முகமது ரிஸ்வான், ஸ்காட் எட்வர்ட்ஸ்
  • பேட்டிங்: பாபர் அசாம், ஷான் மசூத், மேக்ஸ் ஓ'டவுட்
  • ஆல்ரவுண்டர்: பாஸ் டி லீடே, முகமது நவாஸ், ஷதாப் கான்
  • பந்துவீச்சு: ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, டிம் பிரிங்கிள்/பால் வான் மீகெரென்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை