விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கேஎல் ராகுல்!

Updated: Fri, May 16 2025 15:04 IST
Image Source: Google

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. மேலும் மே 29ஆம் தேதி முதல் பிளே ஆஃப் போட்டிகளும், ஜூன் 03அம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுதவிர்த்து பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் மும்பை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஜெய்ப்பூர், அஹ்மதாபாத் நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதனைத்தொடர்ந்து மே 18ஆம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எஞ்சிவுள்ள போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே முன்னேற முடியும் என்பதால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ​​டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அதன்படி கேஎல் ராகுல் மேற்கொண்டு 33 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 8ஆயிரம் ரன்களைக் கடந்த 6ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதுவர ராகுல் 236 டி20 போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 68 அரைசதங்களுடன் 7967 ரன்களை எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

மேற்கொண்டு கேஎல் ராகுல் இந்த போட்டியிலேயே 8ஆயிரம் ரன்களை எட்டும் பட்சத்தில், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 8ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் எனும் விராட் கோலியின் சாதனையையும் முறியடிக்கவுள்ளார். முன்னதாக விராட் கோலி 243 இன்னிங்ஸ்களில் 8ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்து வரும் நிலையில், கேஎல் ராகுல் 223 இன்னிங்ஸ்களில் 7967 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடாத்தாக்கது. 

Also Read: LIVE Cricket Score

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 8000 ரன்கள் எடுத்த வீரர்கள் (இன்னிங்ஸ்)

  • கிறிஸ் கெய்ல் - 213 இன்னிங்ஸ்கள்
  • பாபர் அசாம் - 218 இன்னிங்ஸ்
  • விராட் கோலி - 243 இன்னிங்ஸ்கள்
  • முகமது ரிஸ்வான் - 244 இன்னிங்ஸ்
  • ஆரோன் பின்ச் - 254 இன்னிங்ஸ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை