ENG vs ZIM: தொடரில் இருந்து விலகிய ட்ரெவர்; சிவாங்கா அணியில் சேர்ப்பு!

Updated: Fri, May 16 2025 20:39 IST
Image Source: Google

ஜிம்பாப்வே அணி சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்தன. 

இதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி நேற்று  அறிவிக்கப்பட்டிருந்தது. 

இப்போட்டிக்கான ஜிம்பாப்வே அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. கிரேய்க் எர்வின் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ரஸா மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் கிளைவ் மடாண்டே அணியில் இடம்பிடித்திருக்கும் நிலையில், வின்சென்ட் மசேகேசா ஜிம்பாப்வே டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு ள்ளார்.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெவர் குவாண்டு காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளாது. ஜிம்பாப்வே அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ட்ரெவர் குவண்டு இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்காக பயிற்சி மேற்கொண்ட போது காயத்தை சந்தித்துள்ளதன் காரண்மாகா இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தற்போது வேகப்பந்து வீச்சாளர் டனகா சிவாங்கா ஜிம்பாப்வே டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகமான சிவாங்கா, கடைசியாக கடந்தாண்டு அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயத்தை சந்தித்து அணியில் இருந்து வெளியேறி இருந்தார். இந்நிலையில் தான் தற்சமயம் அவருக்கு மீண்டும் கம்பேக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின், பிரையன் பென்னட், பென் கரண், டனகா சிவாங்கா, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, வெலிங்டன் மசகட்சா, பிளெஸிங் முசரபானி, ரிச்சர்ட் ங்கராவா, நியூமன் நியாம்ஹுரி, விக்டர் நியுச்சி, சிக்கந்தர் ராசா, தஃபத்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.

Also Read: LIVE Cricket Score

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாம் குக், ஜோர்டான் காக்ஸ், ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஓலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை