டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் vs நியூசிலாந்து- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Oct 25 2021 22:22 IST
Pakistan vs New Zealand, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இந்தியாவுடானான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற உற்சாகத்துடன் நாளைய போட்டியில் விளையாடவுள்ளது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் என பலமான பேட்டிங் ஆர்டரைக் கொண்டுள்ளது. அதேபோல் பந்துவீச்சில் ஹசன் அலி, ஷாஹின் அஃப்ரிடி ஆகியோர் இருப்பது அணிக்கான வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. 

அதேசமயம் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சமீப காலங்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மார்டின் கப்தில், டேவன் கான்வே, கேன் வில்லியம்சன், டிம் செய்ஃபெர்ட், கிளென் பிலீப்ஸ் என அதிரடியான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. 

மேலும் பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், கைல் ஜேமிசன், இஷ் சோதி, ஜிம்மி நீஷம் ஆகியோர் இருப்பதால் நிச்சயம் எதிரணிக்கு சவாலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இரு அணிகளுக்கும் இடையே பாகிஸ்தானில் நடைபெற இருந்த டி20 தொடர் பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • பாகிஸ்தான் வெற்றி - 14
  • நியூசிலாந்து வெற்றி - 10

உத்தேச அணி

பாகிஸ்தான் - பாபர் ஆசாம் (கே), முகமது ரிஸ்வான், ஃபகார் ஸமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப், ஷாஹீன் அஃப்ரிடி

நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டிம் செய்ஃபர்ட், கேன் வில்லியம்சன், டெவன் கான்வே, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், இஷ் சோதி, லோக்கி ஃபர்குசன்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - டெவோன் கான்வே, முகமது ரிஸ்வான்
  • பேட்டர்ஸ் - மார்ட்டின் கப்தில், ஃபகார் ஸமான், பாபர் ஆசாம், கிளென் பிலிப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - முகமது ஹபீஸ்
  • பந்து வீச்சாளர்கள் - லோக்கி ஃபெர்குசன், இஷ் சோதி, ஹாரிஸ் ரவுஃப், ஷாஹீன் அஃப்ரிடி.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை