பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Oct 27 2022 11:44 IST
Pakistan Vs Zimbabwe, T20 World Cup, Super 12 - Cricket Match Prediction, Where To Watch, Probable 1 (Image Source: Google)

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சூப்பர் 12 சுற்றில் இன்று க்ரூப் 2இல் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையே போட்டிகள் நடக்கின்றன. இதில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் இந்தியாவிடம் கடைசி வரை போராடி, கடைசி பந்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இதற்கு அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாமின் கேப்டன்சி தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில், அந்த அணி இன்னுமும் தொடக்க வீரர்களான பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரை மட்டுமே நம்பியுள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மற்றபடி பந்துவீச்சில் ஷாஹீன், நசீம், ஹாரிஸ் ராவுஃப் என அசுரவேக பந்துவீச்சைக் கொண்டுள்ளது அந்த அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் மறுமுனையில் ஜிம்பாப்வே அணி சமீப காலங்களில் பல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களுக்கான திறனை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் அந்த அணியின் மிக முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் சிக்கந்தர் ரஸா தான்.

ஏனெனில் சிக்கந்தர் ரஸா கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் 45 அவரேஜுடன் 136 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். அவருக்கு துணையாக வெஸ்லி மதவெரே, கிரேய்க் எர்வின், லுக் ஜோங்வா ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணி சவாலான இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பந்துவீச்சில் பிளசிங் முஸரபானி, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் நகர்வா, ரியான் பர்ல், மில்டன் ஷும்பா ஆகியோருடன் சிக்கந்தர் ரஸாவும் அபாரமாக பந்துவீசி வருவது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே
  • இடம் - பெர்த் கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 17
  • பாகிஸ்தான் - 16
  • ஜிம்பாப்வே - 01

உத்தேச அணி

பாகிஸ்தான்: பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், ஷான் மசூத், ஹைதர் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், இப்திகார் அகமது, ஆசிப் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், நசீம் ஷா.
    
ஜிம்பாப்வே: கிரெய்க் எர்வின் (கே), ரெஜிஸ் சகாப்வா, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, ரிச்சர்ட் ங்காரவா, டெண்டாய் சதாரா, ஆசிர்வாதம் முசரபானி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர்: ரிஸ்வான், சக்பாவா
  •      பேட்டிங்: பாபர் அசாம், ஷான் மசூத், கிரேக் எர்வின்
  •      ஆல்ரவுண்டர்: சிக்கந்தர் ராசா, முகமது நவாஸ், ரியால் பர்ல்
  •      பந்துவீச்சு: முசரபானி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை