சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை - இஃப்திகார் அஹ்மது!

Updated: Tue, Oct 24 2023 17:02 IST
Image Source: Google

உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (அக்டோபர் 23) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானின் தோல்வி அந்த அணியின் ஹாட்ரிக் தோல்வியாகும்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு திறன்மிக்கதாக இல்லாததே தொடர் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் இஃப்திகார் அஹ்மது தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “நான் மற்றும் முகமது நவாஸ் உள்பட எங்களது அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்களது சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. ஆனால், எங்களை முன்னேற்றிக் கொள்ள தொடர்ந்து முயற்சி செய்வோம். அதைத்தான் தற்போது எங்களால் செய்ய முடியும். 

உண்மையில் இந்த மைதானத்தில் 300 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் குவிக்க வேண்டும். ஆனால், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எங்களைக் கட்டுப்படுத்திவிட்டார்கள். பேட்டிங்கில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். பீல்டிங்கின் போது நாங்கள் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். நாங்கள் எங்களை மேலும் சிறப்பாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை