PAKW vs WIW, 4th T20I: விண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது பாகிஸ்தான்!

Updated: Fri, May 03 2024 13:24 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி வெற்றிபெற்று டி20 தொடரையும் கைப்பற்றினர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஜோசப் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஹீலி மேத்யூஸ் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் காம்பெல் 26 ரன்களையும், ஸைதா ஜேம்ஸ் 19 ரன்களைச் சேர்த்ததை தவிற மற்ற அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

பாகிஸ்தான் மகளிர் அணி தரப்பில் அப்பாரமாக பந்துவீசிய சதிய இக்பால், கேப்டன் நிதா தார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு அயீஷா ஸஃபர் - சித்ரா அமீன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆயீஷா அதிரடியாக விளையா, மறுபக்கம் சித்ரா அமீன் 15 ரன்களிலும், முனீபா அலி 8 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் ஆயீஷாவுடன் இணைந்த குல் ஃபெரோசா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயீஷா ஸஃபர் 42 ரன்களையும், ஃபெரோசா 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை