ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!

Updated: Fri, Nov 26 2021 10:54 IST
Image Source: Google

கடந்த 2018இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் தடை பெற்றார். இதையடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஆரோன் ஃபிஞ்ச்சும் நியமிக்கப்பட்டனர்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்தார் டிம் பெய்ன். இந்நிலையில், அவர் சக பெண் ஊழியர் ஒருவருக்கு 2017இல் ஆபாசமாக மெசேஜ் செய்த விவகாரம் அம்பலமானதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டதாக கூறி கேப்டன்சியிலிருந்து விலகினார் டிம் பெய்ன்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக, வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில், டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் பாட் கம்மின்ஸ்.  

மேலும் அணியின் துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் கிரிக்கெட் துறைசார்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை