பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சித்ரா அமீன் - முனீபா அலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின்னர் 56 ரன்களில் முனீபா அலி ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடந்து அபாரமாக விளையாடிவந்த சித்ரா அமீன் சதமடித்து அசத்தினார்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் மகளிர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 123 ரன்களை எடுத்தார்.

அதன்பின் கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை மகளிர் அணியில் ஹசினா பெரேரா 14, அத்தபத்து 16, ஹன்சிமா கருணரத்னே 27, வீரக்கொடி 20 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த் ஹர்ஷித்தா மாதவி - நிலக்ஷி டி சில்வா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓரளவு ரன்களைச் சேர்த்தனர். பின்னர் மாதவி 41 ரன்னிலும், டி சில்வா 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் ஃபாதிமா சனா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Advertisement

இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News