பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!

Updated: Sat, May 24 2025 08:25 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நநடைபெறும் லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை தக்கவைக்க முயற்சி செய்யும், அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறுதல் வெற்றியைப் பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பஞ்சாப் கிங்ஸ்

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி பிளே சுற்றுக்கு முன்னேறிவுள்ள நிலையில், தற்சமயம் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களை தக்கவைப்பதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது மிடில் ஆர்டர் பேட்டர்களும் அபாரமாக விளையாடி வருவது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை சந்தித்துள்ளதால் இப்போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்விகள் உள்ளன. ஒருவேளை அவர் இப்போட்டியில் விளையாடாத பட்சத்தில் முஷீர் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், நேஹால் வதேரா, ஸ்ரேயாஸ் ஐயர்/முஷீர் கான், ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சந்தித்த தோல்வியின் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதன் காரணமாக எஞ்சிய போட்டிகளில் அந்த அணி ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தமட்டில் அபிஷேக் போரல், அக்ஸர் படேல், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தமட்டில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டாலும் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டிக்கான லெவனிலும் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: கேஎல் ராகுல், ஃபஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், அக்ஸர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விபராஜ் நிகாம், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், முஸ்தஃபிசூர் ரஹ்மான், முகேஷ் குமார்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 34
  • பஞ்சாப் கிங்ஸ் - 17
  • டெல்லி கேப்பிடல்ஸ் - 16
  • முடிவில்லை - 01

Also Read: LIVE Cricket Score

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்- கேஎல் ராகுல் (கேப்டன்), பிரப்ஷிம்ரன் சிங் (துணை கேப்டன்), அபிஷேக் போரெல்
  • பேட்ஸ்மேன்கள் - பிரியன்ஸ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர், நேஹால் வதேரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்ஸர் படேல், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய்
  • பந்து வீச்சாளர் - அர்ஷ்தீப் சிங்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை