4,6,4,6,6,4 - ஒரே ஒவரில் 30 ரன்களை விளாசிய பில் சால்ட் - வைரலாகும் காணொளி!

Updated: Thu, Jun 20 2024 12:27 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் பிராண்டன் கிங் காயம் காரணமாக 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 38 ரன்களுக்கும், அதைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ரூதர்போர்டு அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைக் குவித்தது. அதன்பின் 181 ரன்கள் என இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் கேப்டன் ஜோஸ் பட்லர் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மொயீன் அலியும் 13 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 87 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் பில் சால்ட் ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசி அசத்தினார். அதன்படி ரொமாரியோ ஷெஃபெர்ட் வீசிய இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை எதிர்கொண்ட பில் சால்ட், அடுத்தடுத்து மூன்று பவுண்டரி, மூன்று சிக்ஸர்களை விளாசி 30 ரன்களைச் சேர்த்தார். இந்நிலையில் பில் சால்ட் ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை