ஆஸ்திரேலியாவில் பயிற்சியைத் தொடங்கியது இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இத்தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தனிமைப்படுத்துதலை முடித்து தற்போது பயிற்சியை தொடங்கியுள்ளது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
அதன்படி இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் பயிற்சியை மேற்கொள்ளும் புகைப்படங்களை பிசிசிஐ தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.