கரோனா உறுதியாகும் வீரர்கள், இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முடியாது - பிசிசிஐ விதித்த புதிய நிபந்தனை!

Updated: Tue, May 11 2021 12:02 IST
Image Source: Google

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

அதேசமயம் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, இந்த சீசன் பாதியிலேயே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. 

இந்நிலையில் இங்கிலாந்து செல்லும் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு எவ்வித உதவியும் பிசிசிஐ வழங்காது என புதிய நிபந்தனை ஒன்றை விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள வீரர்களில் யாருக்கேனும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு தனி விமானம் மூலம் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய வீரர்களுக்கு மும்பை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பிறகே அவர்கள் செல்ல அனுமதிக்கபடுவர் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிசிசிஐ-யின் இந்த நிபந்தனைகளால் அணியின் மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை