பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்தை 98 ரன்களில் பொட்டலங்கட்டியது தென் ஆப்பிரிக்க!

Updated: Mon, Oct 17 2022 11:45 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரி எட்டாவது சீசன் நேற்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரில் தற்போது, தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதேசமயம் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ள 8 அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. அதன்படி இன்று பிரிஸ்பேனில் நடைபெறும் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் 6 ரன்களிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின் ஜோடி சேர்ந்த மார்ட்டின் கப்தில் - கிளென் பிலீப்ஸ் இணை பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். 

பின் மார்ட்டின் கப்தில் 26 ரன்களிலும், கிளென் பிலீப்ஸ் 20 ரன்களோடும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 17 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கேசவ் மஹாராஜ் 3 விக்கெட்டுகளையும், ஷம்ஸி, பார்னெல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை