பிஎஸ்எல் 2021: தானி பந்து வீச்சில் மண்ணை கவ்விய லாகூர் கலந்தர்ஸ்!
அபுதாபில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கலந்தர்ஸ் அணி பந்து வீசுவதாக முடிவு செய்தது.
இதையடுத்து இன்னிங்ஸை தொடங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் சோயிப் மஃக்சூத் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மஃக்சூத் 60 ரன்களை சேர்த்தார். கலந்தர்ஸ் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கலந்தர்ஸ் அணி தானியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார்.
இதனால் 15.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கலந்தர்ஸ் அணி 89 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மேலும் இப்போட்டியில் 3.1 ஓவர்களை வீசிய ஷான்நவாஸ் தானி ஒரு மெய்டன் உட்பட 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றர்.