பிஎஸ்எல் 2021: அதிரடியில் மிரட்டிய முன்ரோ; இஸ்லாமாபாத் அபார வெற்றி!

Updated: Sat, Jun 12 2021 11:03 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் ஆறாவது சீசன் ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடன் மோதியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இருப்பினும் அந்த அணியின் வெதெர்லட் மட்டும் நின்று விளையாடி 43 ரன்களைச் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்களை சேர்த்தது. 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்ங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர்கள் காலின் முன்ரோ - உஸ்மான் கவாஜா இணை எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்தது. இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய காலின் முன்ரோ 36 பந்துகளில் 90 ரன்களையு, உஸ்மான் கவாஜா 27 பந்துகளில் 41 ரன்களையும் சேர்த்தனர்.

இவர்களது அதிரடியான ஆட்டத்தினால் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 10  ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில்ல் குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி அபாரமான வெற்றியையும் பெற்றது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய காலின் முன்றோ ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

இப்போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி..!

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை