பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத் அணிக்கு 181 ரன்களை இலக்காக்க நிர்ணயித்தது சுல்தான்ஸ்!
அபுதாபில் நடந்து வரும் பிஎஸ்எல் தொடரி ஆறாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷான் மசூத் - மக்சூத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் மசூத் 25 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடிய மக்சூத் அரைசதம் கடந்தார்.
இறுதில் ஜான்சன் சார்லஸ், குஷ்டில் ஷா இணை பவுண்டரி, சிக்சர்கள் என பறக்கவிட்டு அசத்தியது. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மக்சூத் 59 ரன்களையும், குஷ்டில் ஷா 42 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பேட்டிங் செய்யவுள்ளது. மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.