சிக்கலில் சிக்கும் பிஎஸ்எல்; தொடர் மீண்டும் ஒத்திவைப்பா?

Updated: Mon, May 31 2021 22:30 IST
Image Source: Google

பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 6ஆவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் பயோ பபுள் சூழலில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் பாகிஸ்தானில் அதிகரித்து வந்த கரோனா தொற்று காரணமாக இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பிஎஸ்எல் தொடரை நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பயணாக தற்போது பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

இத்தொடரில், பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வீரர்கள் தனி விமானம் மூலம் அபுதாபி சென்று, அங்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நெற்றைய தினம் தோஹாவில் இருந்து அபுதாபி செல்லவிருந்த பாகிஸ்தான் அணி வீரர்கள் சரியான ஆவணங்கள் இல்லாததால், விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பிஎஸ்எல் தொடரில் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் பிஎஸ்எல் தொடரை சில நாள்கள் ஒத்திவைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் முடிந்த அளவிற்கு திட்டமிட்டபடி தொடரை நடத்தவும் பிசிபி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை