பிஎஸ்எல் 2022: ஹேல்ஸ், ஸ்டிர்லிங் அபாரம்; இஸ்லாமாபாத் வெற்றி!

Updated: Sun, Jan 30 2022 19:38 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பெஷ்வர் ஸால்மி அணியில் கொஹ்லர், யசிர் கான், ஹைதர் அலி, தாலத், சோயிப் மாலிக் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இதையடுத்து களமிறங்கிய ரூதர்ஃபோர்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷ்வர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக ரூதர்ஃபோர்ட் 70 ரன்களைச் சேர்த்தார். இஸ்லாமாபாத் அணி தரப்பில் ஹசன் அலி, ஃபஹீம் அஸ்ரஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய இஸ்லாமாபாத் அணிக்கு பால் ஸ்டிர்லிங் - அலெக்ஸ் ஹேல்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. பின் 82 ரன்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஹ்மனுல்லா குர்பஸ் தனது பங்கிற்கு 27 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெஷ்வர் ஸால்மியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை