பிஎஸ்எல் : விமானதில் ஏற வீரர்களுக்கு அனுமதி மறுப்பு; அட முன்னாள் கேப்டனுக்கு இந்த நிலைமையா?

Updated: Mon, May 31 2021 16:19 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சஃப்ராஸ் அஹ்மத். இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் படுதோல்வியைச் சந்திந்து தொடரிலிருந்து வெளியேறியது. இதையடுத்து சஃப்ராஸ் அஹ்மத் தனது கேப்டன் பதவியை துறந்தார்.  

இந்நிலையில், இவர் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறது. இத்தொடரின் 6 ஆவது சீசன் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் தனி விமானம் மூலம் அபுதாபி சென்றடைந்தனர்.  மேலும் சிலர் தோஹாவில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தோஹாவில் இருந்து அபுதாபி செல்ல இருந்த குயிட்ட கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டன் சஃப்ராஸ் அஹ்மத் உள்ளிட்ட பத்து வீரர்கள், சரியான ஆவணங்கள் இல்லாததால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டு, ஐந்து வீரர்கள் மட்டும் அபுதாபி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

அனுமதி மறுக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் தங்கள் தங்கியிருந்த விடுதிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிரச்சனை குறித்து தோஹா விமான நிலைய அலுவலர்களிடம் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை