பிஎஸ்எல் 2022: பாபர் ஆசாம் அதிரடி வீண்; பெஷ்வர் ஸால்மி அபார வெற்றி!

Updated: Sat, Feb 05 2022 12:08 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - பெஷ்வர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி சோயிப் மாலிக்கின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 52 ரன்களை எடுத்தார். கராச்சி அணி தரப்பில் உமைத் ஆசிஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் ஷர்ஜீல் கான், ஃபர்ஹன் ஆகியோர் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் கடந்து விளையாடினார். 

இதில் இருதுவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாபர் ஆசாம் 63 பந்துகளில் 90 ரன்களைக் குவித்த போதிலும், கராச்சி கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதன்மூலம் பெஷ்வர் ஸால்மி அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை