அபுதாபியில் நடந்து வரும் பிஎஸ்எல் டி20 தொடரின் 27ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு பாபர் அசாம், மார்டின் கப்தில் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் பாபர் அசாம் அரைசதம் கடந்தார். 

Advertisement

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 54 ரன்களையும், மார்டின் கப்தில் 43 ரன்களையும் எடுத்தனர். 

பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணி தொடக்கம் முதலே சிரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் டிம் டேவிட் - ஜேம்ஸ் ஃபால்க்னர் இணை இறுதியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தர முயர்சித்தது. 

ஆனால் அவர்களது முயர்ச்சி தோல்வியில் முடிந்தது. டிம் டேவிட் 34 ரன்களிலும், ஜேம்ஸ் ஃபால்க்னர் 33 ரன்களிலும் ஆட்டமிழக்க, லாகூர் கலந்தர்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததது. 

இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News