பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்தது.

Advertisement

இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசாம் 39 ரன்களைச் சேர்த்தார். கலந்தர்ஸ் அணி தரப்பில் ஸமான் கான், ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய கலந்தர்ஸ் அணி ஆரம்பத்திலேயே ஒருசில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அதிரடியாக விளையாடிய முகமது ஹபீஸ் 33 ரன்களிலும், டேவிட் வைஸ் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. கராச்சி அணி தரப்பில் மிர் ஹம்ஸா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி இத்தொடரின் முதல் வெற்றியைப் பெற்றது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News