ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
15ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 15 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 16ஆவது லீக் போட்டி மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இதில் மயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
- இடம் - ப்ராபோர்ன் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
அந்த அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் மயங் அகர்வால், ஷிகர் தவான், லிவிங்ஸ்டன், ராஜபக்சே, ஷாருக்கான் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் ரபடா, ராகுல் சஹார் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணியாக உள்ளது. இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
குஜராஜ் அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, கேப்டன் கார்த்திக் பாண்டியாக் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் ரஷித்கான், முகமது ஷமி, லோக்கி பெர்குசன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். தொடர் வெற்றி பெற்று வரும் குஜராத் அணி இந்த போட்டியிலும் வெல்லும் முனைப்பில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
உத்தேச அணி
பஞ்சாப் கிங்ஸ் - மயங்க் அகர்வால் (கே), ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், ஜிதேஷ் சர்மா, ஒடியன் ஸ்மித்/ ஜானி பேர்ஸ்டோவ், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா.
குஜராத் டைட்டன்ஸ் - ஷுப்மன் கில், மேத்யூ வேட், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி ஃபர்குசன், வருண் ஆரோன்/ யாஷ் தயால், முகமது ஷமி.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ஜிதேஷ் சர்மா
- பேட்டர்ஸ் - பானுகா ராஜபக்சே, மயங்க் அகர்வால், ஷுப்மான் கில்
- ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்திக் பாண்டியா
- பந்துவீச்சாளர்கள் - ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, ரஷித் கான், முகமது ஷமி, லாக்கி ஃபர்குசன்.