ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Apr 29 2022 15:10 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனின் 42ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.லக்னோ அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று, 4ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. அடுத்த 6 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றாலே, பிளே ஆஃபுக்கு முன்னேறிவிட முடியும். பஞ்சாப் அணி 8 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று 7ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. 

பிளே ஆஃப் செல்ல வேண்டும் என்றால், அடுத்த 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றே ஆக வேண்டும். இதனால், இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கிறது.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - எம்சிஏ மைதானம், புனே
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

லக்னோ அணியில் பலம் கேப்டன் கே.எல்.ராகுல்தான். இதுவரை 8 போட்டிகளில் 61.33 சராசரியுடன் 368 ரன்களை குவித்துள்ளார். ஆல்-ரவுண்டர்கள் க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா, ஆயூஸ் படோனி, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஜேசன் ஹோல்டர் போன்றவர்கள் கடந்த சில போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

டி காக் கடைசி ஐந்து போட்டிளில் சேர்த்து 87 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இன்று இவர்களில் இரண்டு பேராவது சிறப்பாக விளையாடினால்தான், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஆவேஷ் கான் காயத்தில் இருந்து குணமடைந்திருப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம்.

சமீரா, ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இன்று பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக் கேப்டன் மயங்க் அகர்வால், கடந்த 8 போட்டிகளில் ஒருமுறை மட்டுமே டாஸ் ஜெயித்துள்ளார். இரவு நேர போட்டிகளில் டாஸ் வென்றால்தான், போட்டியை வெல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனால், இன்றாவது பஞ்சாப்புக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தவன் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு காரணமாக இருந்தார். மயங்க் இன்னமும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. ராஜபக்சா, லிவிங்ஸ்ன், பேர்ஸ்டோ போன்றவர்கள் இன்று அதிரடி காட்டியே ஆக வேண்டும். பந்துவீச்சில் ரிஷி தவன், ரபாடா, ராகுல் சஹார், அர்ஷ்தீப் சிங், சந்தீப் ஷர்மா என அனைவரும் சிறப்பாக செயல்படுவதால், லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்த சிரமப்படுவார்கள் எனக் கருதப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்

புனே ஸ்டேடியத்தில் கடந்த 7 போட்டிகளில் 4 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிதான் வென்றுள்ளது. இதனால், இன்று டாஸ் வெல்லும் அணி எதை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஸ்பின்னர்களால் இன்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக இன்று இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

உத்தேச அணி

லக்னோ அணி: குவின்டன் டி காக், கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா, ஆயூஷ் படோனி, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஜேசன் ஹோல்டர், ஆவேஷ் கான், துஷ்மந்த் சமீரா, ரவி பிஷ்னோய்.

பஞ்சாப் அணி: ஷிகர் தவன், மயங்க் அகர்வால், பனுகா ராஜபக்சா, லியம் லிவிங்ஸ்டன், ஜானி பேர்ஸ்டோ, ஜிதேஷ் ஷர்மா, ரிஷி தவன், காகிசோ ரபாடா, ராகுல் சஹார், அர்ஷ்தீப் சிங், சந்தீப் ஷர்மா.

ஃபேண்டஸி லெவன்

  • கீப்பர் - லோகேஷ் ராகுல் , குயின்டன் டி காக்
  • பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, மயங்க் அகர்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ரவி பிஷ்னோய்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை