ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்; போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், நேற்றுமுதல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது.
இதில், நாளை நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.
நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடனும் புள்ளிப்பட்டியலில் 5, 6ஆம் இடங்களில் நீடித்து வருகின்றன. இதனால் இனி வரும் போட்டிகளில் இரு அணிகள் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற முடியும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகல் : பஞ்சாப் கிங்ஸ் - ராதஸ்தான் ராயல்ஸ்
- இடம் : துபாய் சர்வதேச மைதானம்
- நேரம் : இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
ராகுல், மயாங்க் அகர்வால், கெயில், பூரன், ஹூடா, ஷாருக் கான் என அதிரடி பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ள பஞ்சாப் அணி, சிறுசிறு தவறுகளால் வெற்றியை இழந்துள்ளது. அதேசமயம் பந்துவீச்சில் முகமது ஷமி, ரவி பிஷ்னோய், ஆகியோருடன் நாதன் எல்லீஸ், ஆதில் ரஷித் ஆகியோர் அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, எஞ்சியுள்ள போட்டிகளில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், பட்லர் என நட்சத்திர வீரர்களின்றி களமிறங்கவுள்ளது. அணியின் முக்கிய வீரர்கள் இல்லாமல் அந்த அணி வெற்றிபெறுவது கடினம் தான்.
இருப்பினும் எவின் லூயிஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர் இருப்பது அணியின் பேட்டிங்கிற்கு வலுசேர்க்கும் என நம்பப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா ஆகியோருடன் தப்ரைஸ் ஷம்ஸி அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலமே.
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் - 22
- பஞ்சாப் கிங்ஸ் - 10
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 12
உத்தேச அணி
பஞ்சாப் கிங்ஸ் - கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன்/கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, ஐடன் மார்க்ரம், மோஸிஸ் ஹென்ரிக்ஸ், ஷாருக் கான், ஜலாஜ் சக்சேனா, அதில் ரஷித்/கிறிஸ் ஜோர்டான், முகமது ஷமி, முருகன் அஷ்வின்/ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்
ராஜஸ்தான் ராயல்ஸ் - எவின் லூயிஸ், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், மனன் வோரா, சஞ்சு சாம்சன், ரியான் பராக், லியாம் லிவிங்ஸ்டோன், சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேத்தியா, முஸ்தாபிசூர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன், நிக்கோலஸ் பூரன், கேஎல் ராகுல்
- பேட்டர்ஸ் - எவின் லூயிஸ், மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ராம்
- ஆல் -ரவுண்டர்கள் - கிறிஸ் மோரிஸ், லியாம் லிவிங்ஸ்டன்
- பந்துவீச்சாளர்கள் - முஸ்தபிசூர் ரஹ்மான், முகமது ஷமி, ரவி பிஷ்னோய்.