டி20 உலகக்கோப்பை: சர்ச்சை குறித்து விளக்கமளித்த டி காக்!

Updated: Thu, Oct 28 2021 14:51 IST
Cricket Image for டி20 உலகக்கோப்பை: சர்ச்சை குறித்து விளக்கமளித்த டி காக்! (Image Source: Google)

உலகக்கோப்பையில் விளையாடும் அணிகள் இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் ஆதரவு தெரிவித்தன. இதனால் ஒவ்வொரு போட்டிகள் தொடங்குவதற்கும் முன்பாக, இரு அணி வீரர்களும் முழங்காலிட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தென்ஆப்பிரிக்கா அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. அப்போது தென்ஆப்பிரிக்கா அணி விக்கெட் கீப்பர் டி காக் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் சர்ச்சை வெடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2ஆவது போட்டிக்கு முன் அவர் அணியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் அடுத்த போட்டியில் இருந்து டி காக் விளையாடுவார் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

மேலும், இதுகுறித்து டி காக் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர்,‘‘நான் ஒரு கலப்பு இன குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதை அறியாதவர்களுக்காக என்னுடைய சக வீரர்கள் மற்றும் நாட்டு ரசிகர்களிடம் வருத்தம் சொல்வதுடன் ஆரம்பிக்க  விரும்புகிறேன். என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரிகள் வெள்ளை நிறத்தை சேர்ந்தவர்கள். என்னுடைய வளர்ப்பு தாயார் கருப்பு இனத்தை சேர்ந்தவர். என்னை பொறுத்த வரைக்கும் பிறந்தததில் இருந்து இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என விவகாரம் இருந்து வருகிறது.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

நம் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன. அவை முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். அவர்கள் உரிமைக்காக, இந்த வழியில் நாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லும்போது,  என்னுடைய உரிமை பறிக்கப்படுவதாக உணர்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை