ஒல்லி ராபின்சன் தடைக்கு வருத்தம் தெரிவித்த அஸ்வின்!

Updated: Tue, Jun 08 2021 14:24 IST
Image Source: Google

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அறிமுக வீரர் ஒல்லி ராபின்சன். இவர் தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கெதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடி, பலரின் பாராட்டைப் பெற்றவர். 

இந்நிலையில்  8 ஆண்டுகளுக்கு முன்பு ஒல்லி ராபின்சன் தனது ட்விட்டர் பதிவில் இனவெறியை தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதற்கு ராபின்சன் விளக்கமளித்த போதும் அதனை ஏற்க மறுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு 8 மாத காலம் இடைக்கால தடை விதித்தது. 

இதையடுத்து ஒல்லி ராபின்சனுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக வருத்தப்படுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அஸின் தனது  ட்விட்டரில் "சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்மறையான பதிவுகளை அவர் தெரிவித்ததற்காக இப்போது தண்டனை கிடைத்திருக்கிறது. அவரை கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டு இருக்கிறார். நான் உண்மையாகவே ராபின்சனுக்காக வருத்தப்படுகிறேன். ஒரு அறிமுக வீரராக டெஸ்ட்டில் அடிவைத்து சிறப்பான தொடக்கத்தை தந்தார். இந்தத் தடையின் மூலம் வீரர்களின் எதிர்காலம் சமூக வலைத்தளங்களின் கைகளில் இருக்கிறது என தெரிகிறது" என பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை