ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 15ஆவது சீசன் 68ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெற்றால்தான் ராஜஸ்தான் அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை உருவாக்க முடியும்.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- இடம் - பிரபோர்ன் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்ட்ம
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த சீசனை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால் கடந்த போட்டியில் குஜராத்திற்கு எதிராக ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோருக்கு வாய்ப்புகளை வழங்கவில்லை. மாற்றாக களமிறங்கிய ஜெகதீசன், ஷிவம் துபே போன்றவர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் சொதப்பினார்கள். மேலும் கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே ஒரு பவுண்டரியை கூட அடிக்கவில்லை என்பதுதான் சோகத்திலும் பெரிய சோகம்.
இதனால், இன்று கடைசி போட்டியில் வெற்றிபெறும் நோக்கில் மீண்டும் மூத்த வீரர்கள் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோரை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால், இந்த இருவர்களுக்கும் எதிராக அஸ்வின் சிறந்த ரெக்கார்ட் வைத்திருப்பதாலும், இன்றைய போட்டி நடைபெறவுள்ள ப்ராப்ரௌன் பிட்ச் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த இருவரால் இன்று அதிரடியாக விளையாட முடியாது எனக் கருதப்படுகிறது. இதனால், இறுதி முடிவு எடுப்பதில் தோனிக்கு பெரிய சிக்கல் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
ராஜஸ்தான் அதிரடி ஓபனர் பட்லருக்கு எதிராக பிராவோ 19 சராசரியில் ரன்களை விட்டுக்கொடுத்து 3 முறை விக்கெட்களை கைப்பற்றியிருக்கிறார். இதனால், இன்று பிராவோவை சேர்த்தால், அது சிஎஸ்கேவுக்கு கூடுதல் பலமாக இருக்கும். பட்லர் முதல் 7 போட்டிகளில் 491 ரன்கள் அடித்த நிலையில், அடுத்த 6 போட்டியில் 136 ரன்களை மட்டும் அடித்து, சொதப்பியிருக்கிறார்.
பட்லர் கடந்த 6 போட்டிகளிலும் சொதப்பியிருந்தாலும், இவர் சிஎஸ்கேவுக்கு எதிராக 6 இன்னிங்ஸ்களில் 150 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 265 ரன்களை சேர்த்துள்ளார். இதனால், இன்று பட்லர் பார்முக்கு திரும்ப வாய்ப்புள்ளது. அதேபோல் ஒன் டவுனாக சாம்சன் களமிறங்கி, படிக்கலுக்கு மிடில் வரிசையில் இடம் வழங்கியிருப்பதும் நல்ல முறையில் ஒர்க் அவுட் ஆகி வருகிறது. ஹெட்மையர் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இவர்கள் அனைவரும் அபாரமான பேட்ஸ்மேன்கள் என்பது ராஜஸ்தான் அணியில் பலம்.
மேலும் பந்துவீச்சில் போல்ட், பிரசித் கிருஷ்டா, சஹல், அஸ்வின் போன்றவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இன்று வெற்றிபெற்றால் தான் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும் என்பதால், இன்று அதிரடியாக பந்துவீச வாய்ப்புள்ளது.
நேருக்கு நேர்
மோதிய போட்டிகள் - 25
ராஜஸ்தான் வெற்றி - 10
சிஎஸ்கே வெற்றி - 15
பிட்ச் ரிப்போர்ட்:
போட்டி நடைபெறும் பிரபோர்ன் மைதானம் பேட்டிங், ஸ்பின்னிற்கு சாதகமானது. இங்கு ராஜஸ்தான் இரண்டு போட்டிகளிலும் விளையாடி, இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளது. சிஎஸ்கே இரண்டிலும் தோற்றுள்ளது.
உத்தேச அணிகள்:
சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே, ராபின் உத்தப்பா, மொயின் அலி, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, மகேந்திரசிங் தோனி, மிட்செல் சாண்ட்னர், பிரசாந்த் சோலங்கி, மதீஷ பதிரனா, முகேஷ் சௌத்ரி.
ராஜஸ்தான் அணி: யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மையர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரன்ட் பௌல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஜ்வேந்திர சஹல், ஒபெட் மிக்கே.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன், என்.ஜெகதீசன்
- பேட்டர்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் பாடிக்கல், டேவன் கான்வே, யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- ஆல்-ரவுண்டர்கள் - ஆர்.அஷ்வின், மொயீன் அலி
- பந்து வீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ட்ரெண்ட் போல்ட், மதீஷா பத்திரான.